சுப்ரீம் கோர்ட் அனுமதி அதிர்ச்சியளிக்கிறது; ஆர்எஸ்எஸ் பேரணியால் பதற்றமான சூழல் ஏற்படும்: பாலகிருஷ்ணன் பேட்டி

நெல்லை: ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன்மூலம் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்று நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சட்டம்- ஒழுங்கு பராமரிப்பை கணக்கில் கொண்டு அரசும், காவல்துறையும் அனுமதி மறுக்கும் சூழலில் சுப்ரீம் கோர்ட் இப்போது அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரணி நடத்த எல்லோருக்கும் ஜனநாயக உரிமை உண்டு என்றாலும், அதைப் பயன்படுத்தி மத கலவரத்தை தூண்டக்கூடாது.

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்படும். ஆளுநர் ரவி ஆளுநராக இருப்பதற்கே அவர் தகுதியற்றவர். ஒன்றிய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும். அம்பையில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அம்பை காவல் நிலைய விசாரணையில் நடந்த சித்ரவதை தொடர்பான மார்க்சிஸ்ட் குழு கண்டறிந்த உண்மை அறிக்கையை வெளியிட்டார்.

The post சுப்ரீம் கோர்ட் அனுமதி அதிர்ச்சியளிக்கிறது; ஆர்எஸ்எஸ் பேரணியால் பதற்றமான சூழல் ஏற்படும்: பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: