ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!!

பெங்களூரு: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதபோட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பெங்களூரு – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77 ரன்களையும், டுபிளசிஸ் 62 ரன்களையும் விளாசினர்.

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஷ்வால், படிக்கல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

The post ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!! appeared first on Dinakaran.

Related Stories: