ரவுடி குண்டாசில் சிறையிலடைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (39) மீது வழக்கு உள்ளது. இந்நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேஷ்குமார் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், குற்றவாளி ராஜேஷ்குமார் ஓராண்டு தடுப்புக்காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ராஜேஷ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

The post ரவுடி குண்டாசில் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: