அப்போது மாநில கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரக்கோணத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (20), மாநில கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் பூபதி (19), மாநில கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஆகாஷ் (18) ஆகியோர், பச்சையப்பன் கல்லூரி மாணவன் ராகேஷ் ஆனந்திடம் ‘இது எங்கள் ரூட், நீ எதற்கு வந்தாய்’ என்று தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரும் கையிலருந்தகத்தியால் பச்சையப்பன் கல்லூரி மாணவன் ராகேஷ் ஆனந்தை சரமாரியாக பஸ்க்குள்ளேயே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த பயணிகள் அச்சத்தில் அலறியடித்து வெளியே ஓடினர்.
அப்போது காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவன் ராகேஷ் ஆனந்தை பொதுமக்கள் மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மாணவன் ராகேஷ் ஆனந்த் சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பச்சையப்பன் கல்லூரி மாணவனை கத்தியால் வெட்டிய மாநில கல்லூரி மாணவர்கள் விநாயகமூர்த்தி, பூபதி, ஆகாஷ் ஆகியோர் மீது ஐபிசி 341, 294(பி),323, 324, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
The post சென்ட்ரலில் ரூட் தல பிரச்னையில் மோதல் மாநகர பேருந்தில் சென்ற மாணவனுக்கு கத்திக்குத்து: மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.