×

முடக்கற்றான் சோள தோசை

தேவையானவை:

முடக்கற்றான் கீரை – 1 கைப்பிடி
நாட்டுச் சோளம் – 1 கிலோ
உளுந்து – 200 கிராம்
எண்ணெய் – தேவையானவை
சின்ன வெங்காயம் – 4
மிளகு – அரை தேக்கரண்டி
பூண்டு – 2 பல்.

செய்முறை:

நாட்டுச் சோளத்தையும், உளுந்தையும் எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து நைஸாக அரைக்கவும். பிறகு, முடக்கற்றான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வாணலியில் வதக்கிக் கொள்ளவும். அத்துடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து வதக்கி, மிக்ஸில் அரைத்து சோளமாவுடன் கலந்து, தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தோசையாக ஊற்றி எடுத்தால், முடக்கற்றான் தோசை தயார்.

The post முடக்கற்றான் சோள தோசை appeared first on Dinakaran.

Tags :
× RELATED அவகோடா பிரெட் பர்பி