×

நுங்கு குல்ஃபி

தேவையான பொருட்கள்

நுங்கு – 8
பால் – 2 டம்ளர்(காய்ச்சி ஆறியது)
சர்க்கரை – 1/4 கப்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்க்ரீம் குச்சி – 8
நுங்கு துண்டுகள் – 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

நுங்கை சுத்தம் செய்து, தோலை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பிளேட்டில் போடவும். பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். அடுத்து பாலை ஊற்றி அரைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் அரைத்ததை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சோள மாவை பாலில் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். நன்கு கொதித்து குறுகினதும், சோளமாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறி, ஒன்று சேர சிறிது கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும். இறக்கி ஆறினதும், டம்ளர்களில் ஊற்றி மேலே நுங்கு துண்டுகளை போடவும். பிறகு ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து, டம்ளரில் இருந்து குல்ஃபி குச்சியை மெல்ல ஆட்டி டம்ளரில் இருந்து வெளியே எடுத்து சுவைக்கலாம். வித்தியாசமான, சுவையான, சுலபமான நுங்கு குல்ஃபி ரெடி.

 

The post நுங்கு குல்ஃபி appeared first on Dinakaran.

Tags : Nungu Kulfi ,Nungu ,
× RELATED மிரட்டும் கோடை வெயில்; மீண்டும் சூடு...