×

செட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல்

தேவையானவை :

வாழைக்காய் – 2
பொரிகடலை – 2 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்- 10
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வாழைக்காயின் தோல் சீவியபின் அடர்த்தியான நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.1 தேக்கரண்டி சோம்பு, மிளகாய், பொரிகடலை, கசகசா, இவற்றை கரகரப்பான தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.வாழைக்காய் துண்டுகளுடன் உப்பு மற்றும் தூளாக்கியுள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி கலந்து வைக்கவும்.வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, நன்றாக வதக்கி எடுத்து பரிமாறவும்.

 

The post செட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல் appeared first on Dinakaran.

Tags : Chettinad Banana ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்