×

மஞ்சள் பூசணி அல்வா

தேவையான பொருட்கள்

4 கப் துருவிய பூசணி
1/2 டம்ளர் பால்
2 ஸ்பூன் நெய்
1.5 கப் சர்க்கரை
முந்திரி
உலர் திராட்சை.

செய்முறை

முதலில் அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு துருவிய பூசணிக்காய் சேர்த்து வதக்கவும். அதன் பச்சை வாசனை போன பின்பு, பால் சேர்த்து மூடி போட்டு வேக விட வேண்டும். பூசணிக்காய் வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கரைய விடவும். பின், இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாகக் கிளறினால் சுவையான பூசணி அல்வா தயார். கூடுதல் சுவைக்கு நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து அல்வாவில் கிளறியும் சாப்பிடலாம்.

 

The post மஞ்சள் பூசணி அல்வா appeared first on Dinakaran.

Tags :
× RELATED கீரை தேங்காய்ப்பால் சூப்