எங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பெரியப்பா, அவரது மனைவி, மகள் பெயரில் மாற்றப்பட்டதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டது. எங்களுக்கு சொந்தமான பட்டாக்களை மற்றொருவருக்கு மாற்றம் செய்வதற்கான நிபந்தனைகளை கடைப்பிடிக்கவில்லை. முன்னோர் பெயரில் உள்ள சொத்துக்களை விதிமுறைகளை மீறி திருத்தம் செய்து வருவாய்ப்பதிவேடுகளில் மாற்றம் செய்துள்ளனர்.
முறைகேடாக வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றி பட்டா மாற்றம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். முறைகேடாக பெயர் மாற்றம் செய்த பட்டாவை இரத்து செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
The post உரிமையாளருக்கு தெரியாமல் வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த வழக்கு: மாவட்ட பதிவாளர் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.