×

நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை முருகரைப் பற்றிதான் பேசி வருகிறோம்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை வடபழனி கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து அவர் தியானம் மேற்கொண்டார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: வரும் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினார். தற்போது நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். நிறைய பேர் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை. முருகரை பற்றி தான் பேசி வருகிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 தொகுதியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். பவன் கல்யாண் முருக பக்தர். அறுபடை வீடுகளுக்கு அவர் ஏற்கனவே வந்து விட்டு சென்றிருக்கிறார். இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொள்ளக் கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? இவ்வாறு அவர் கூறினார்.

The post நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை முருகரைப் பற்றிதான் பேசி வருகிறோம்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Nainar Nagendran ,Chennai ,Tamil Nadu ,Lord Shiva ,Vadapalani temple ,Murugan ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...