வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு!

சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான 20/23 -ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்01 / 2023, நாள்.05.06.2023-ன்படி 10.09.2023 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் (Optical Mark Recognition (OMR)) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது மேற்காணும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) வினாத்தாள் 4 வகைக்குரியது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான //trb.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 03.10.2023 முதல் 10.10.2023 பிற்பகல், 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வுவாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும். கையேடுகள் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தேர்வர்கள் வினாத்தாள் TRB websiteல் வெளியிடப்பட்டுள்ளதற்குரிய தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணைய வழியில் ஆட்சேபணை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும்.

சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் பகுதி-B-ல் வினா எண் 31 முதல் 180 வரை உள்ள வினாக்களுக்கு மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்கலாம். பகுதி-A-ல் உள்ள 01 முதல் 31 வரையிலான கட்டாயத் தமிழ் மொழி பகுதியின் வினாக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் தெரிவிக்கக் கூடாது. மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு! appeared first on Dinakaran.

Related Stories: