மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டம்: அப்போலோ மருத்துவமனை அறிமுகம்

சென்னை: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) மலக்குடல் புற்றுநோயின் மேலாண்மைக்கென்று இந்தியாவின் முன்னோடித்துவமான அணுகுமுறையாக அப்போலோ ரெக்டல் கேன்சர் (ஏஆர்சி – ARC) சிகிச்சை செயல்திட்டத்தை சமீபத்தில் தொடங்கி இருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலக்குடலை அகற்றாமல் தக்கவைப்பது, சிறப்பு கவனம் மற்றும் கீமோரேடியோதெரபி, புரோட்டான் தெரபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்பட மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஏஆர்சி செயல்திட்டம் செயல்படுகிறது. இதுதொடர்பாக அப்போலோ நிறுவனர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், மலக்குடல் புற்றுநோய் என்ற ஒரே ஒரு உடல் உறுப்பை சார்ந்த மற்றும் ஒரே வகை புற்றுநோய்க்கான சிகிச்சை மேலாண்மையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு தனிப்பிரிவு செயல்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறை. எதிர்காலத்தில் மலக்குடல் புற்றுநோய்க்கு எப்படி சிகிச்சை மேலாண்மை வழங்கப்படும் என்பதில் உலகளவில் ஒரு புதிய தர அளவுகோலை இது நிறுவப்போகிறது’ என்றார்.

The post மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டம்: அப்போலோ மருத்துவமனை அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: