கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் (சிபிஎல்) களமிறங்கும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியில் விளையாடுவதற்காக, இந்திய அணி முன்னாள் நட்சத்திரம் அம்பத்தி ராயுடு (37 வயது) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ராயுடு விளையாட இருந்த நிலையில், ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் ஓராண்டு இடைவெளிக்கு பிறகே வெளிநாட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்ற பிசிசிஐ விதிமுறை காரணமாக கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. இந்த நிலையில், சிபிஎல் தொடரில் பங்கேற்க ஒப்புதல் வழங்கப்பட்டால், பிரவீன் தாம்பேவுக்கு பிறகு இத்தொடரில் களமிறங்கும் 2வது இந்திய வீரர் என்ற பெருமை ராயுடுவுக்கு கிடைக்கும். சிபிஎல் 2023 சீசன் ஆக. 17ம் தேதி தொடங்குகிறது.
The post செயின்ட் கிட்ஸ் அணியில் ராயுடு appeared first on Dinakaran.