மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்வதற்கும் கரைப்பதற்கும் தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை பின்பற்றி சிலைகள் செய்யப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலை செய்யக்கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் ஆணை உள்ளபோது எப்படி அனுமதிக்கப்படுகிறது எனவும் வினவினர். அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: