ராமநாதபுரம்: காவிரி -ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பராமரிப்பு பணி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் செப் 23, 24 ஆகிய 2 தினங்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவேரி), தொகுதி -IIIல் சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயல் அருகில் 1100 mm விட்டமுள்ள பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் 23.09.2023 மற்றும் 24.09.2023 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
The post ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் செப் 23, 24 ஆகிய 2 தினங்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.