×

சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூ.3,000 என்றும் அல்லது சுங்கச்சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 வீதமும், வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு ரூ.3,000 ஆண்டு கட்டணம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Chennai ,PMK ,Dinakaran ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...