×

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டிய இளம் சகோதரிகள்!!

டெல்லி: ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். அண்ணன், தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் (ஆகஸ்ட்) வரும் முழு நிலவு நாளில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்து, அவர்களின் மணிக்கட்டில் ராக்கி எனும் புனித கயிறு கட்டுவர். பதிலுக்கு சகோதரர்கள், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரர்கள், சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். இன்று ரக்ஷா பந்தன் நிகழ்வு நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷாபந்தன் நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த புனிதமான நாளில், உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையை பள்ளி மாணவிகளுடன் கொண்டாடியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

The post ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டிய இளம் சகோதரிகள்!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Raksha ,Delhi ,Modi ,
× RELATED விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு...