மழையால் அறந்தாங்கி சந்தை வெறிச்சோடியது

 

அறந்தாங்கி,நவ.15: அறந்தாங்கி பகுதியில் மழையால் செவ்வாய் சந்தை வெறிச்சோடியது.அறந்தாங்கி பேராவூரணி சாலையில் தஞ்சாவூர் சத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் மழை பெய்தால் சந்தையில் சாலை முழுவதும் மழை தண்ணீர் தேங்கி சேறு சகதியுமாக சாலை மாறி விடுகிறது. இதனால் அறந்தாங்கியில் செவ்வாய்சந்தையின் போது மழை பெய்தால் சந்தைக்கு போக பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்க்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இதனால் நேற்று சந்தையில் குறைந்த அளவிலேயே கடைகள் போடப்பட்டிருந்தன. மேலும் மழையால் சந்தை வளாகம் சேறும் சக்தியும் காணப்படும் என கருதி பொதுமக்கள் சந்தைக்கு வரவில்லை. இதனால் நேற்று சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. பேராவூரணி சாலையின் ஓரத்தில் உள்ள கடைகளில் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். சந்தை வளாகத்திற்குள் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post மழையால் அறந்தாங்கி சந்தை வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Related Stories: