சென்னை: சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழைக்கு முன் மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகளை முடித்திட வேண்டும். மக்களுக்கு எவ்வித நெருக்கடியுமின்றி பணிகளை செய்திட வேண்டும் என ஆய்வுக்கூடத்தில் அமைச்சர் கூறினார்.