சென்னை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.