அப்போது, “புயல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். புயல் மற்றும் கனமழை தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்டங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. நிவாரண முகாம், மாநில பேரிடர் குழுக்களை தயாராக வைத்திருக்க வேண்டும். மழை பாதிக்கும் பகுதியில் உள்ள மக்களை முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்அப், சமூகவலைதளங்கள் மூலம் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
புயல் பாதிக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின்சார இணைப்புகளை துண்டித்து, புயல் மற்றும் மழை பாதிப்புக்கு பின்னர் உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். புயலின் போது, விழக்கூடிய மரங்களை உடனே அகற்றுவதற்கு குழுக்கள் போதி உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலை நிறுத்த வேண்டும். மீட்புப் பணிகளில் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, தீயணைப்புத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும், “என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
The post கனமழையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்திட காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.