சிம்லா; இமாச்சலபிரதேசத்தில் கொட்டித்தீர்த்த கன மழை பாதிப்புகளால் இதுவரை 74 பேர் உயிரிழந்தனர். மழை பாதிப்புகள் குறித்து பேசிய இமாச்சலப் பிரதேச முதல்வர் சுவிந்தர் சிங் சுக்கு,’தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவம் போன்ற ஒன்றிய அரசு குழுக்களின் உதவியுடன் மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. மழையினால் பாதிக்கப்பட்டவர்வர்கள் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க மாநில அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும். மழை பாதிப்பினால் ரூ.10,000 கோடி சேதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மழை பாதிப்பு ‘மாநிலப் பேரிடர்’ ஆக அறிவிக்கப்படுகிறது. அதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார். கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கிய பருவ மழையில் இமாச்சலில் இதுவரை 217 பேர் உயிரிழந்தனர்.
The post ரூ.10,000 கோடி மழை சேதம் இமாச்சலில் மாநில பேரிடர்: முதல்வர் சுக்விந்தர்சிங் அறிவிப்பு appeared first on Dinakaran.