பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: மணிப்பூர் அரசு விளக்கம்

இம்பால்: பாதுகாப்பு காரணங்களுக்காக இம்பாலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மணிப்பூர் அரசு விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் இம்பாலில் இருந்து ஜனவரி 14ம் தேதி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை 6,713 கி.மீ. தூரம் பயணித்து மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 66 நாட்களில் 110 மாவட்டங்களில் உள்ள 100 மக்களவை மற்றும் 337 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மக்களை ராகுல் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா காங்ஜெய்புங்கில் இருந்து யாத்திரையை துவக்க காங்கிரஸ் விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பம் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், யாத்திரைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தீவிர பரிசீலனையில் இருக்கிறது. யாத்திரைக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது என மணிப்பூர் அரசு தெரிவித்தது. மேலும், மணிப்பூர் முதலமைச்சர் பைரென் சிங்கை சந்தித்து கோரிக்கை காங்கிரஸ் நிர்வாகிகள் விடுத்தனர். இந்நிலையில் மணிப்பூரில் தொடங்கவுள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

The post பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: மணிப்பூர் அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: