ராகிங் செய்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மாணவனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

கோவை: ராகிங் செய்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மாணவனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவன் வெங்கடேசை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராகிங் விவகாரத்தில் ஏற்கனவே 7 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.

The post ராகிங் செய்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மாணவனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: