இதுதொடர்பாக வேல்முருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், காமாட்சியம்மன் கோயில் நிலத்தை உடனடியாக தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று புதுவை அரசுக்கு உத்தரவிட்டார். இதற்கான நடவடிக்கையை புதுச்சேரி சப்-கலெக்டர் கந்தசாமி (வருவாய்) ஒப்புதலோடு வருவாய் அதிகாரி அருண் அய்யாவு மேற்கொண்டார். அதன்பேரில் காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 2 சொத்துக்கள் இன்று (வெள்ளி) காலை 10 மணியளவில் மீட்கப்பட்ட இடத்தை கோயில் அறங்காவல் குழுவினருக்கு காண்பித்து ஒப்படைக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் முன்னிலையில் காமாட்சியம்மன் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளிடம், சாரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்த நிலத்திற்கான ஆவணங்கள் சப்-கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி சீனியர் எஸ்பி நாரா.சைதன்யா உத்தரவின்பேரில் கிழக்கு எஸ்பி சுவாதிசிங் மேற்பார்வையில் பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்வின்போது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு எஸ்பி மோகன்குமார் தலைமையிலான குழுவினரும் உடனிருந்தனர்.அப்போது அங்கிருந்த காமாட்சியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நிலத்தை மீட்க உதவிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
The post புதுவை சப்-கலெக்டர் தலைமையில் பாஜ எம்எல்ஏக்கள் அபகரித்த கோயில் நிலங்கள் மீட்பு: தேவஸ்தான நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.