புதுக்கோட்டை அடுத்த பூங்குடி தலைவெட்டி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

 

புதுக்கோட்டை, ஆக.28: புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தலைவெட்டி பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த தலைவெட்டி பிள்ளையார் ஆலயம் உள்ளது. 100 ஆண்டுகள் பழையான இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள் மற்றும் கோயில் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். பின்னர் பொதுமக்கள் ஒன்றுகூடி நிதி வசூல் செய்து கோயிலை புதுப்பித்தனர். பின்னர் இராமேஸ்வரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட புனிதநீரை வைத்து பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கோயில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டை அடுத்த பூங்குடி தலைவெட்டி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: