×

நடப்பாண்டு வீட்டு வரி உயராது: அமைச்சர் நேரு பேட்டி


திருவாரூர்: திருவாரூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவாரூர் கமலாலயம் வடகரையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்தனர். இதில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் நேரு அளித்த பேட்டி: பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் எந்த அளவுக்கு சென்றடைந்தது என்றும், கட்சியின் செயல்பாடுகள், பணியாற்றியவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முதல்வர் தெரிவித்துள்ளவாறு தற்போதுள்ள கூட்டணி உறுதியாக தொடரும். வீட்டு வரியை வருடந்தோறும் 6 சதவீதம் உயர்த்த வேண்டும். ஆனால் நடப்பாண்டில் முதல்வரின் உத்தரவின்படி வீட்டு வரி உயராது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நடப்பாண்டு வீட்டு வரி உயராது: அமைச்சர் நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Nehru ,Tiruvarur ,Thiruvarur ,district ,DMK ,Kamalalayam Vadakarai, Tiruvarur ,K.N. Nehru ,Industries ,T.R.P.Raja ,District Secretary ,Poondi Kalaivanan ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...