திருமலை: ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு ஆட்சியை பிடித்த நிலையில் அவரது ெஹரிடேஜ் புட்ஸ் பங்குகள் உயர்ந்து மனைவி சொத்து 5 நாட்களில் ரூ584 கோடி உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பங்குச்சந்தையில் பல ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன. ஆந்திராவில் நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி தனித்து 135 இடங்களிலும் கூட்டணியுடன் 164 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மேலும், கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஒன்றியத்தில் மோடியின் 3.0 ஆட்சியின் ‘கிங்’ மேக்கராக மாறி உள்ளார். ஆனால், அவரது நிஜ வாழ்க்கையின் இல்லத்து ராணி அவரது மனைவி நாரா புவனேஸ்வரி ஆவார்.
சந்திரபாபுநாயுடு முதல்வராக பதவியேற்க உள்ள சூழலில் புவனேஸ்வரி கடந்த 5 நாட்களாக பங்குச் சந்தையின் ‘ராணி’யாக வலம் வந்துள்ளார். புவனேஷ்வரியின் பங்குச் சந்தையின் சொத்து ஐந்து நாட்களில் ரூ584 கோடியாக அதிகரித்துள்ளது. சந்திரபாபுநாயுடுவின் மனைவி நாரா புவனேஷ்வரி ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் 2 கோடியே 26 லட்சத்து 11 ஆயிரத்து 525 பங்குகளை வைத்துள்ளார். சந்திரபாபுவின் வெற்றியின் தாக்கம் அந்நிறுவனத்தின் பங்கு விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ584 கோடி உயர்ந்தது appeared first on Dinakaran.