டெல்லி: அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடியுடனான இந்தச் சந்திப்பு நம்பிக்கைக்குரியது. வரிகளில் பரஸ்பரமில்லாத சூழல் இருந்த நிலையில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஒப்புக்கொண்டது ஒரு நேர்மறையான அறிகுறி என நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து, சசி தரூர் விளக்கம் அளித்தார். அதில்; பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நம் நாட்டுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதனாலேயே அவரை பாராட்டினேன். நான் அனைத்து நேரங்களிலும், காங்கிரஸ்காரராக பேச முடியாது. டிரம்ப் பதவியேற்ற பின், அவரை சந்தித்த நான்காவது உலக தலைவர் பிரதமர் மோடி என்பது, உலக அரங்கில் நம் நாட்டுக்குள்ள முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதே நேரத்தில், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை, அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி ஏன் எழுப்பவில்லை என்பதும் வியப்பாக உள்ளது. ஒருவேளை, இந்த விவகாரத்தை டிரம்பிடம் மோடி தனியாக எழுப்பினாரா என்றும் தெரியவில்லை. இந்த குறிப்பிட்ட விவகாரத்தில், நாட்டின் நலனுக்காக மட்டுமே பேசுகிறேன் என்று அவர் கூறினார்.
The post பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை பாராட்டியது ஏன்? – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விளக்கம் appeared first on Dinakaran.