×

மழை வேண்டி தண்ணீரில் அமர்ந்து யாகம்

திருப்பூர்: திருப்பூர் அருகே மழை வேண்டி தண்ணீரில் அமர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்து. திருப்பூர் பொங்கலூரை அடுத்த தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி செம்மாண்ட கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நேற்று நடைபெற்றது.

அப்போது சிவாச்சாரியார் பெரிய அண்டாவில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் அமர்ந்து யாக பூஜை செய்தார். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் மழை வேண்டி இந்த யாகம் நடந்தது.

The post மழை வேண்டி தண்ணீரில் அமர்ந்து யாகம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Sri Selva Vinayagar ,Sri Makaliamman Temple ,Avinasipalayam Oradachi Semmanta Countampalaya ,Tiruppur Pongalur ,Yakam ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி...