×

குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு; 19ம் தேதி வரை மழை

 

சென்னை: நேற்று இலங்கை அருகே நீடித்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு நோக்கி நகர்ந்து குமரிக் கடலின் தெற்கே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வட மாவட்டங்களில் நேற்று மழை பெய்த நிலையில், தற்போது ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சித்ரகோட்டை அடுத்த தேவிப்பட்டினத்தில் அதிகபட்சமாக 101 மிமீ மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பரங்கிப் பேட்டை அடுத்த காயல்பட்டு 80மிமீ மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூர் தூறல் மழை பெய்துள்ளது கொடநாடு 19மிமீ மழை பெய்துள்ளது. கோவை திண்டுக்கல் பகுதிகளில் மழை பெய்துள்ளது. சோமங்கலம் 33 மிமீ, ஆழியாறு 20மிமீ மழை பெய்துள்ளது. டெல்டாவில் மேலவாசல் 20 மிமீ, சென்னையில் மதுரைவாயல் 28மிமீ, ஐஸ்அவுஸ் 21 மிமீ மழை பெய்துள்ளது.

தென் மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மயிலாடுதுறை கனமழை பெய்துள்ளது. கோவில்பட்டியில் 22 மிமீ, தென் மாவட்டங்கள் டெல்டாவிலும் இன்று மழை பெய்யும். தென்காசி, சங்கரன்கோயில், கழுகுமலை, வில்லிபுத்தூர், வம்பக்கோட்டை, சாத்தூர், கோவில்பட்டி, தொண்டி முதல் தூத்துக்குடி வரை கனமழை பெய்யும். பாம்பன், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி, விளாத்திகுளம், மானாமதுரை, இளையாங்குடி, விருதுநகர் பகுதிகளிலும் இன்று மதியம் மழை பெய்யும். பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, பாளையங்கோட்டை, கொற்கை, காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், கூடங்குளம், பத்தமடை, மணிமுத்தாறு, பாபநாசம், குற்றாலம் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். திண்டுக்கல் திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.இந்நிலையில், 19ம் தேதி வரை லேசான மழை நீடித்து, 20ம் தேதிக்கு பிறகு மழை சற்று குறையும் வாய்ப்புள்ளது.

 

Tags : Kumari Sea ,Chennai ,Sri Lanka ,
× RELATED சிறுபான்மையினர் ஆணையத்தின் 38 மாவட்ட...