உருளைக்கிழங்கு முறுக்கு

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட வேண்டும். பின் தோலுரித்த உருளைக்கிழங்கை பிளெண்டரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, சீரகம், பெருங்காயத் தூள், வெண்ணெய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு இடியாப்ப உழக்கை எடுத்து, அதில் முறுக்கு அச்சை வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து முறுக்கு வடிவில் பிழிய வேண்டும். பின் பிழிந்த முறுக்கை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.

The post உருளைக்கிழங்கு முறுக்கு appeared first on Dinakaran.