அப்போது அங்கு வந்த போலீசார் இருவரையும் ஓட்டலில் இருந்து அழைத்து சென்று என்கவுன்டரில் கொன்றனர். இது ஒரு போலி என்கவுன்டராகும். எனவே, இதுகுறித்து செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் என்கவுன்டர், லாக் அப் மரணம் உள்ளிட்டவை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post போலீஸ் என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.