திருச்சி: துவரங்குறிச்சி அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தங்கதுரை (31), ஸ்ரீராம் {28), கார்த்திக் ராஜா (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.11,707 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.