எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 24 கம்பெனி துணை ராணுவ படை வீரர்களும் குவிக்கப்பட்டனர். ஷ்ராவண் மாதத்தின் கடைசி திங்கள்கிழமை என்பதால் பக்தர்கள் மட்டும் நல்ஹர் சிவன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அயோத்தியை சேர்ந்த மடாதிபதியான ஜகத்குரு பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் நூஹ் நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதை கண்டித்து வர் உண்ணாவிரதம் இருந்தார். பரமஹம்ச ஆச்சார்யா கூறுகையில்,‘‘ நல்ஹர் சிவன் கோயிலில் ஜலாபிஷேகம் செய்வதற்காக சரயு நதியில் இருந்து புனித நீரை கொண்டு வந்தேன். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்’’ என்றார். நூஹ் மாவட்ட கலெக்டர் கூறுகையில்,‘‘ 15 மடாதிபதிகள் மற்றும் சில இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் சிவன் கோயிலில் ஜலாபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்’’ என்றார்.
The post பலத்த போலீஸ் பாதுகாப்பால் நூஹ் நகரே வெறிச்சோடியது: யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதால் மடாதிபதிகள் கோயிலில் வழிபாடு appeared first on Dinakaran.