ஒரு பூ கிளையிலேயே தூக்கிட்டுக் கொள்வது எத்துணை பெரிய சோகம் : கவிஞர் வைரமுத்து

சென்னை : பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மனஅழுத்ததில் இருந்ததாகவும், இதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.விஜய் ஆண்டனியின் மகள் உடல் நுங்கம்பாக்கம் தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் காலை 11 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,

‘கொலை என்பது
மனிதன் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு

தற்கொலை என்பது
சமூகத்தின் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு

விஜய் ஆண்டனி
மகளின் தற்கொலை
சமூகத்தை எந்தப் புள்ளியில்
எதிர்க்கிறது என்பதைக்
கண்டறிந்து களைய வேண்டும்

ஒரு பூ
கிளையிலேயே
தூக்கிட்டுக் கொள்வது
எத்துணை பெரிய சோகம்

வருந்துகிறேன்

ஒரு குடும்பத்தின்
சோகத்தைப் பங்கிட்டு
என் தோளிலும்
ஏற்றிக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

The post ஒரு பூ கிளையிலேயே தூக்கிட்டுக் கொள்வது எத்துணை பெரிய சோகம் : கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Related Stories: