கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி கடற்படை தினத்தை முன்னிட்டு இந்த கோட்டையில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். அந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே சூறை காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு 35 அடி உயர பிரமாண்ட சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து, இடிந்து விழுந்து விட்டது.
சிலை இடிந்து விழுந்ததற்கு மாநில அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மாநில அரசு எந்த பணியையும் நேர்த்தியாக செய்வதில்லை. வேலையின் தரம் பற்றி மாநில அரசு கவலைப்பட்டதே இல்லை. சிலை விழுந்ததற்கு இதுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன. ஆனால், பலத்த காற்று வீசியதால் சிலை உடைந்துவிட்டதாகவும், விரைவில் புதிய சிலை அமைக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
The post 8 மாதத்துக்கு முன் பிரதமர் மோடி திறந்துவைத்த 35 அடி உயர சிவாஜி சிலை இடிந்து விழுந்தது: கட்டுமானத்தில் முறைகேடு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.