×

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

உலகளவில் பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக Luggage Losers நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவில் 31 பயணிகளில் ஒருவரின் உடைமைகள் தொலைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Spice Jet 6வது இடத்திலும், இண்டிகோ நிறுவனம் 10வது இடத்திலும் உள்ளன. சமீபத்தில் விமானத்தில் பயணித்த தனது காதலியின் உடைமைகள் தொலைந்ததை அடுத்து, விமான நிறுவனங்களை அம்பலப்படுத்தும் நோக்கில் காதலன் தொடங்கிய இணையதளமான luggagelosers-ல் இந்த தரவுகள் பதிவிடப்பட்டுள்ளன.

The post பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்! appeared first on Dinakaran.

Tags : Air India ,Luggage ,Spice Jet ,Indigo ,Dinakaran ,
× RELATED பெண் விமானியை பலாத்காரம் செய்து...