×

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் ஜன.31ல் தொடக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் ஜன.31ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடங்குகிறது. அன்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். பிப்.1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் அதை தொடர்ந்து நடைபெற உள்ளது. பிப்.9ம் தேதி வரை பட்ஜெட் தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசுக்கான பதவிக்காலம் ஜூன் 16ம் தேதி வரை உள்ளது.

The post நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் ஜன.31ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Lok Sabha elections ,Parliament ,President ,Drabupati Murmu ,
× RELATED பாஜவை தொடர்ந்து விமர்சித்தஜேடியு...