×

பாரீஸ் ஒலிம்பிக் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய இணை வெண்கலம் வென்றது

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் 2-வது பதக்கம் இந்தியா வென்றது. ஒலிம்பிக் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய இணை வெண்கலம் வென்றது. வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் கொரிய இணையை வீழ்த்தி இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஜூலை 26ல் கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர். இந்த தகுதிச் சுற்றில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாகர் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.

ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்காக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை 22 வயதான மனு பாக்கர் பெற்றுள்ளார். 10 ஏர் பிஸ்டலின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் சிறப்பாக ஆடி 3 வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக் பதிப்பில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் தடகள வீராங்கனையாக மனு பாக்கர் வரலாறு படைத்தார்.

 

The post பாரீஸ் ஒலிம்பிக் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய இணை வெண்கலம் வென்றது appeared first on Dinakaran.

Tags : air pistol gunnery ,Paris Olympics ,Paris ,India ,Olympic 10m Air Pistol Gunnery Competition ,Manu Packer ,Sarabjot ,pistol ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...