×

வடமேற்கு பாகிஸ்தானில் டிரோன் தாக்குதலில் 22 பேர் காயம்

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஒரு வாலிபால் மைதானத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்தனர். இங்கு கடந்த பதினைந்து நாட்களுக்குள் இரண்டாவது முறையாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் பர்மல் தாலுகாவின் அசாம் வர்சக் பகுதியில் உள்ள கரம்சி ஸ்டாப் அருகே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இதில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. டிரோன் தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post வடமேற்கு பாகிஸ்தானில் டிரோன் தாக்குதலில் 22 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : strike ,northwest Pakistan ,PESHAWAR ,Pakistan ,northwest Khyber Pakhtunkhwa ,South Waziristan… ,Drone strike ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!