ஓசூரில் ஒயிட்லாங் ரக கத்திரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்; கேரளா, கர்நாடாகாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் மகிழ்ச்சி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 2 மாதங்களில் அதிக வருவாய் தரக்கூடிய ஒயிட்லாங் ரக கத்திரிக்காய்களை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் நல்ல மண் வளம் ஆகியவற்றால் பெரும்பாலான விவசாயிகள் பீன்ஸ், கேரட், தக்காளி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓசூர் அருகே பாரந்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர், ஒயிட்லாங் கத்திரிக்காயை அதிகளவு சாகுபடி செய்துள்ளார்.

வெளிச்சந்தைகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அனைத்து கத்திரிக்காய்களை, கேரளா, கர்நாடகாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட சூழ்நிலையில் அழிந்துவரும் விவசாயத்தை பாதுகாக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒயிட்லாங் கத்திரிக்காயை இயற்கை முறையில் விளைவித்ததாக கூறும் விவசாயிகள், அதற்காக 50 லோடு மாட்டு சாணத்தை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 3 மாதங்களில் 4 ஏக்கரில் 100 டன் ஒயிட்லாங் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

The post ஓசூரில் ஒயிட்லாங் ரக கத்திரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்; கேரளா, கர்நாடாகாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: