×

ஓர­ணி­யில் தமிழ்­நாடு திட்­டத்தை பட்­டி­தொட்டி எங்­கும் சேர்ப்­போம் அடி­மை­கள்-பாசிஸ்­ட்டு­க­ளின் கூட்­ட­ணியை வீழ்த்துவோம்: துணை முத­ல்வர் உத­ய­நிதி பேச்சு

சென்னை: சென்­னை­யில் திமுக தலை­வர் முத­ல்வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில், `ஓர­ணி­யில் தமிழ்நாடு உறுப்­பி­னர் முன்­னெ­டுப்பு மற்­றும் பரப்­புரை பய­ணம்’ தொடர்­பாக, காணொ­லிக் காட்சி வாயி­லாக நடை­பெற்ற ஆலோசனை கூட்­டத்­தில் திமுக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ர் துணை முத­ல்வர் உத­ய­நிதி ஸ்டாலின், கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்­நாட்­டின் சுய­ம­ரி­யா­தை­யைக் காக்க தலை­வர் மு.க.ஸ்டாலின் வரும் 1ம் தேதி தொடங்கி வைக்­க­வுள்ள ஓர­ணி­யில் தமிழ்­நாடு திட்­டத்தை பட்­டி­தொட்டி எங்­கும் சேர்ப்­போம். அடி­மை­கள் பாசிஸ்­ட்டு­க­ளின் கூட்டணியை வீழ்த்­து­வோம். ஓர­ணி­யில் தமிழ்­நாடு வெல்­லட்­டும்.

வரு­கின்ற சட்­ட­மன்­ற தேர்­தல், நமக்கு மிக மிக முக்­கி­ய­மான தேர்­தல். பாசிச பாஜ அர­சு­டன் இந்தியாவிலேயே கருத்­தி­யல் ரீதி­யாக போட்டி போடக்கூடிய ஒரே இயக்­கம் திமுக. ஒரே தலை­வர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் என்­பதை நீங்­கள் அனைவரும் றி­வீர்­கள். அதன் கார­ண­மா­கத்­தான் நம் திரா­விட மாடல அரசை எப்­ப­டி­யா­வது வீழ்த்தி விட வேண்­டும் என்று, பாசிச பாஜ அரசு துடித்­து
கொண்­டி­ருக்­கி­றது. அதற்­கா­கத்­தான் எதிர்க்­கட்­சி­களை எல்லாம் தொடர்ந்து மிரட்டி மிரட்டி அவர்­க­ளின் அணி­க­ளில் சேர்த்து
கொண்­டி­ருக்­கிறார்­கள்.

பாஜவுடன் இனி எதிர்­கா­லத்­தி­லும் கூட்­டணி கிடை­யாது என்று அதிமுக சொன்னது. ஆனால், இப்­போது என்ன நடந்­து­ கொண்­டி­ருக்­கி­றது. இப்­படி நம்மை எதிர்க்க எந்த எல்­லைக்­கும் செல்ல பாசிச பாஜக துணிந்து இருக்­கி­றது. ஏனென்­றால், நாம்­ தான் பாசிச பாஜவிற்கு கருத்­தி­யல் ரீதி­யாக உண்மையான எதிரி. நம்மை எதிர்­கொள்­ளவே முடி­யா­மல் திண­று­கி­றது பாஜக. அதற்­குக் கார­ணம் நம் தலைவர் தான். மும்­மொ­ழிக் கொள்­கையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னால்­ தான் பள்­ளிக் கல்­வித் துறைக்­கான 2,152 கோடி ரூபாய் நிதி­யைத் தரு­வோம் என்று ஒன்­றிய பாசிச பா.ஜ.அரசு சொன்­னது.

நீங்­கள் ரூ.2,000 கோடி இல்லை 10,000 கோடி ரூபாய் கொடுத்­தா­லும் உங்­க­ளின் மும்­மொ­ழிக் கொள்­கையை நாங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்று சொல்­லி­விட்­டார் நம் முத­ல்வர். இப்­படி தமிழ்­நாட்­டின் நல­னுக்கு எதி­ராக எந்த ஒரு திட்­டத்­தைக் கொண்டு வந்­தா­லும் அதை உறு­தி­யோடு எதிர்ப்­ப­வர், நம் தலை­வர். வலி­மை­மிக்க தொண்­டர்­களை உற்­சா­க­மாக அர­வ­ணைத்­துச் சென்று, மதுரை பொதுக்­கு­ழு­வில் திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் நமக்கு கொடுத்து இருக்­கின்ற கட்­ட­ளையை நாம் நிறை­வேற்ற வேண்­டும்.

வரு­கின்ற சட்­ட­மன்ற தேர்­தல் வெற்றி மிக மிக முக்­கி­ய­மா­னது. அதற்கு நிர்வாகிகளுக்குள் இருக்­கக்­கூ­டிய சிறு சிறு பிரச்­ச­னை­களை, முரண்­களை எல்­லாம் மறந்து, கருத்து வேறுபாடுகளை எல்­லாம் கடந்து நாம் அனை­வ­ரும் ஓர­ணி­யில் நின்று பணி­யாற்­று­வது அவ­சி­யம். திமுக ஏழாவது முறை­யாக வெற்றி பெற்று, தலை­வர் மு.க.ஸ்டாலின் இரண்­டா­வது முறை­யாக முத­ல்வர் ஆவதே நம் அனை­வ­ரின் ஒரே இலக்கு.

அதற்கு நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பாடு­பட உறுதி ஏற்­போம். ஓர­ணி­யில் தமிழ்­நாடு என்று தலை­வர் சொல்லி இருக்­கின்ற, இந்­தத் திட்­டத்தை வெற்றி பெற வைத்து விட்­டோம் என்றால் அதுவே சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நாம் பாதி வெற்­றியை அடைந்து விட்­டோம் என்­பதை உறுதி செய்ததாகி விடும். எனவே அதை மட்­டுமே மன­தில் கொண்டு, அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பாடு­பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* நம்மை எதிர்க்க எந்த எல்­லைக்­கும் செல்ல பாசிச பாஜ துணிந்து இருக்­கி­றது. ஏனென்­றால், நாம்­ தான் பாசிச பாஜவிற்கு கருத்­தி­யல் ரீதி­யாக உண்மையான எதிரி.

The post ஓர­ணி­யில் தமிழ்­நாடு திட்­டத்தை பட்­டி­தொட்டி எங்­கும் சேர்ப்­போம் அடி­மை­கள்-பாசிஸ்­ட்டு­க­ளின் கூட்­ட­ணியை வீழ்த்துவோம்: துணை முத­ல்வர் உத­ய­நிதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,DMK ,President ,Chief Minister ,M.K. Stalin ,Orani ,Youth Wing Secretary ,Udhayanidhi Stalin ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!