×

ஓரணியில் தமிழ்நாடு என மக்களை திமுகவில் இணைத்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு என மக்களை திமுகவில் இணைத்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலியில் நடைபெற்றது. காணொலி மூலம் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் காணொலி கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு” புதிய உறுப்பினர் சேர்க்கை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பின்னர் அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறுகையில், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் – நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என மக்களை இணைத்திட, சொல்லாற்றல் – செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்! களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்! இவ்வாறு தெரிவித்தார்.

The post ஓரணியில் தமிழ்நாடு என மக்களை திமுகவில் இணைத்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Orani, Tamil Nadu ,Dimugal ,Chief Mu. K. Stalin ,Chennai ,First Minister MLA ,Tamil Nadu ,Orani ,K. Stalin ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Dimuka District Secretaries ,M. B. s. M. L. A. ,Chief Minister Mu. K. Stalin ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி...