பெரம்பூர்: எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகே நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 1,000க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சட்டமன்றம் என்பது மாண்பு மற்றும் மரபின் அடிப்படையில் செயல்பட வேண்டும். சபாநாயகர், முதலமைச்சர், ஆளுநர் ஒருங்கிணைந்து செயல்படாததால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆளுநர் பேச இருந்த உரையில் தவறான தகவல்கள் இருந்தன. நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். விரைவில் எங்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் விவரம் உங்களுக்கு தெரிய வரும். தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும். மகத்தான கூட்டணி அமையும்’’ என தெரிவித்தார்.
The post ஓபிஎஸ் இருக்கை விவகாரம் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.