ஊட்டியில் மலைப்பாங்கான பகுதிகளில் படிமட்ட முறையில் பயிரிட நிலங்களை தயார் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மலைப்பாங்கான பகுதிகளில் படிமட்ட முறையில் காய்கறி பயிர்கள் பயிரிட நிலங்களை தயார் செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். நீலகிாி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறி பயிர்கள் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிாிப்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் படிமட்டங்கள் ஏற்படுத்தி காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

நீலகிரியை பொருத்த வரை ஜூன் துவங்கி டிசம்பர் வரை பெய்ய கூடிய தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பருவமழை இல்லாத சமயங்களில் விவசாய நிலங்களுக்கு நடுவே செல்ல கூடிய ஓடைகள் மற்றும் கிணறு பாசனத்தை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

பல இடங்களில் தற்காலிக கிணறு அமைத்தும் மழை பெய்யும் சமயங்களில் அவற்றை சேமித்து விவசாயம் நடக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழை பெய்த போதும் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாமலேயே முடிவிற்கு வந்தது. தற்போது உறைப்பனி பொழிவு மற்றும் கோைட காலம் துவங்கிய நிலையில் ஆடாசோலை உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்வோர் கிணறு பாசனத்தை நம்பி விவசாய பணிகளை துவக்கி நிலங்களை சமன்படுத்தி வருகின்றனர். மோட்டார் உதவியுடன் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

The post ஊட்டியில் மலைப்பாங்கான பகுதிகளில் படிமட்ட முறையில் பயிரிட நிலங்களை தயார் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: