ஒரே நாடு ஒரே தேர்தல் அப்போ எதிர்த்தோம்… இப்போ ஆதரிக்கிறோம்… : எடப்பாடி பழனிசாமி விளக்கம்

கோவை: ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் 2018ம் ஆண்டு அப்போதைய சூழலை கொண்டு அதிமுக எதிர்த்தது. தற்போதைய சூழலில் அதனை ஆதரிக்கிறது’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதன்பிறகு சரி.. மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக. இதில், எங்களுக்கு முழுமையான ஈடுபாடு உள்ளது.

எங்களை யாரும் குறை சொல்ல முடியாது. தற்போது உதயநிதி சனாதனத்தை பேசும் பொருளாக மாற்றியுள்ளார். இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவது குறித்து கேட்கிறீர்கள். அது தொடர்பான விவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு பதில் அளிக்கிறேன். பல்லடம் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் 2018ம் ஆண்டு அப்போதைய சூழலை கொண்டு அதிமுக எதிர்த்தது. தற்போதைய சூழலில் அதனை ஆதரிக்கிறது. சீமான் என்ன பேசுகிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் அப்போ எதிர்த்தோம்… இப்போ ஆதரிக்கிறோம்… : எடப்பாடி பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: