நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. 2 மாதங்கள் ஆகியும் அடையாளம் காணப்படாத 29 பேரின் சடலங்கள்!!

புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 29 பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலாசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நிர்ணயிக்கப்பட்ட மெயின் லைனுக்கு பதிலாக பஹானாக பாஜார் நிலையத்தின் லூப் லைனில் நுழைந்து நின்று கொண்டு இருந்த சரக்கு ரயிலில் மோதியது. இதில் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் மீது பெங்களூரு – ஹவுரா இடையேயான அதிவேக ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு முற்றிலும் மனித தவறே காரணம் என்று ரயில்வே துறை விசாரணையில் உறுதியாகி உள்ளது.

இதனிடையே சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 81 பேரின் சடலங்கள், அடையாளம் காணப்படாமல் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டன. ஒரு சடலத்திற்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால், டிஎன்ஏ சோதனை மூலம் சடலங்களை அடையாளம் காண ரயில்வேயும், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையும் முடிவு செய்தன.அதன்படி, முதல்கட்டமாக 103 பேருக்கு மரபணு சோதனை செய்ததில் 52 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட இறுதிகட்ட DNA மாதிரிகளின் முடிவுகள் விரைவில் வந்துவிடும். அதன் அடிப்படையில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும்; உரிமை கோராமல் மீதமிருக்கும், உடல்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கும்

The post நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. 2 மாதங்கள் ஆகியும் அடையாளம் காணப்படாத 29 பேரின் சடலங்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: