இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சித் தலைவியுடன், அவரின் கணவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டோரை அனுப்பி வைத்தனர். இப்பிரச்னை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொறுப்பு அதிகாரிங்களோட வசூல் வேட்டை ஓவராக இருக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குயின் பேட்டை மாவட்டத்துல வா என்ற எழுத்துல தொடங்கி ஜா என்று முடியுற ஒன்றியம் இருக்குது. இங்க ஹெல்த் சூப்ரவைசராக மலையை பெயரில் கொண்டவர் பணியாற்றி வர்றாரு. இவருக்கு கூடுதல் பொறுப்பும் கொடுத்திருக்காங்களாம். பர்த் அண்டு டெத் விவரங்களை மாவட்ட அளவில் இவர்தான் தர வேண்டுமாம்.
கடந்த 2013ல இருந்து 2017 வரைக்கும் பர்த் அண்டு டேத் விவரங்களை ஆன்லைன்ல பதிவேற்றம் செய்யலையாம். இதனால, மாவட்டத்துல இருக்குற பப்ளிக், ஒவ்வொரு கவர்மெண்ட் ஆபிசுக்கும் ஏறி, இறங்கி அவதிப்படுறாங்களாம்.கூடுதல் பொறுப்பை சாதகமாக பயன்படுத்திகிட்டு, நல்லா சம்திங் பார்க்குறாராம். சிப்ல தொடங்கி காட்ல முடியுற ஏரியா, சோவில் தொடங்கி லிங்கத்துல முடியுற பகுதிகளுக்கு ஆய்வு என்று கூறிக்கொண்டு, வேறு ஒரு திட்டத்துக்காக இருக்குற வாகனத்தை வசூல் வேட்டைக்கு கொண்டு போய்டுறாராம். இவரை போல ஹெல்த் டிபார்ட்மெண்ட்லயே பெயரில் ஆனந்தத்தை வைத்திருக்கும் அதிகாரியும் ஆய்வு என்ற பெயர்ல வசூல் வேட்டை நடத்துவாராம். இதனால இவங்க ரெண்டு பேருக்கும் அப்பப்ப தகராறு நடக்குமாம்.
ஹெல்த் ஆபிஸ்ல பணியாற்றி வர்ற ஊழியருங்க, இவங்க ரெண்டு பேரையும் சமாதானம் செய்றதுலயே பாதி நேரம் வீணாகப்போய்டுதுன்னு புலம்பி வர்றாங்களாம். வேலையும் சரிவர நடக்குறதில்லையாம். இதனால ஹெல்த் டிபார்ட்மெண்ட்ல இருக்குற ஏடி, டிடி பணியிடங்களை நிரப்பி, இவங்க 2 பேர் மேலயும் விசாரணை நடத்த வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆபாச வீடியோ ஆசாமி அரண்டு போயிருக்காராமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோ லீக் ஆன விவகாரத்தில் கட்சி தொண்டர்கள் கொதிப்படைந்து போய் இருக்கிறாங்களாம். எம்.பி. தேர்தல் வர உள்ள நேரத்தில் இப்படி கட்சி தொண்டர்கள் சோர்வாக இருந்தா எதுவும் தேறாது. கட்சி வேலை செய்ய கூட ஆள் வர மாட்டாங்க என்று கட்சி தலைமைக்கு தகவல் போய் இருக்காம். இதனால் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வேலை தொடங்கி இருக்காம்.
மாவட்டத்தை 4 ஆக பிரித்து கிழக்கு, மேற்கு, மத்தி என மாவட்ட செயலாளர்கள் வர போறாங்களாம். மாநகருக்கு என்று தனியாக ஒரு செயலாளர் வருகிறாராம். இப்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை மாற்ற முடிவு பண்ணிட்டாங்களாம். ஆபாச வீடியோவில் சிக்கிய நிர்வாகியின் பதவியும் பறி போய் விடும் என பேசுகிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாவட்ட செயலாளர் பதவி தாமதத்தால் சேலம்காரர் மீது சந்தேகத்தில் முக்கிய நிர்வாகிகள் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் நெற்களஞ்சிய மாவட்ட செயலாளராக மாஜி அமைச்சர் வைத்தியானவர் இருந்து வந்தார். இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியாக செயல்பட்டதால் வைத்தியானவர் தேனிக்காரர் அணியில் சேர்ந்தார்.
நெற்களஞ்சிய மாவட்டத்துக்கு வைத்தியானவரே தற்போது வரை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். ஆனால் சேலம்காரர் அணி சார்பில் தற்போது வரை மாவட்ட செயலாளர் பதவி நியமிக்கப்பட வில்லை. நெற்களஞ்சிய மாவட்ட செயலாளர் பதவியை பிடிப்பதற்காக டெல்டா மாவட்டத்தில் உள்ள மாஜி அமைச்சர்கள், சேலத்துக்காரை நேரில் சென்று முறையிட்டனர். ஆனாலும், மாவட்ட செயலாளர் நியமிக்கப்படவில்லை.
இவர்களை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளும் சேலம்காரரை நேரில் சந்தித்து மாவட்ட செயலாளர் பதவியை கேட்டுள்ளனர். ஆனாலும் அவர்களுக்கும் பதவி கிடைக்கவில்லை. நெற்களஞ்சிய மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பதவி போடாமல் சேலம்காரர் அமைதியாக இருந்து வருவது நிர்வாகிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தேனிக்காரர் அணிக்கு விலகி சென்றவர்கள் மீண்டும் சேலம்காரர் அணிக்கு திரும்பி வந்தால், அவர்களில் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா
The post ஆபாச வீடியோ அதிமுக நிர்வாகியின் பதவிக்கு ஆபத்து வந்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.