×

வீடுகளில் மின் பயன்பாடு கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19000 கோடி டெண்டருக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீடுகளில் மின் பயன்பாடு கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. குறைந்த தொகையில் டெண்டர் கொன்றும் வகையில் எதிர் ஏலம் நடைமுறை பின்பற்றப்படும் என்ற எதிர்த்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மின்வாரியம் அறிவிப்பை எதிர்த்து எஃபிகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெண்டரை தனி நீதிபதி ரத்து செய்திருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மின்வாரியம் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தனர். மின்வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.

தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவான மின்சார அளவை பார்த்து, மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். சிலர் தாமதமாக கணக்கெடுப்பதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும், அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. சில ஊழியர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் பணம் பெற்று, அதிக மின்சாரத்தை குறைத்து கணக்கு எடுக்கின்றனர். இதனால், மின் வாரியத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும், ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மீட்டரில் தகவல் தொடர்பு சாதனம் பொருத்தி, அலுவலக, ‘சர்வர்’ உடன் இணைக்கப்படும். கணக்கெடுக்கும் தேதி மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், அந்த தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு மின் பயன்பாடு, கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். சோதனை முயற்சியாக, சென்னை தி.நகரில், 1.42 லட்சம் மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, கணக்கு எடுக்கப்படுகிறது. இத்திட்டத்தை மாநிலம் முழுதும் விரிவுபடுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

The post வீடுகளில் மின் பயன்பாடு கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19000 கோடி டெண்டருக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை